மலையாள நடிகர், நடிகைகள் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள். இதற்காக வெளியூர் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு கேரளா வந்திருந்தனர்.
ஓணம் கொண்டாட்டம் குறித்து அசின் கூறியதாவது,
ஓணம் பண்டிகையை கொண்டாட ஜெய்ப்பூரில் நடந்த போல்பச்சன் படப்பிடிப்பில் இருந்து இரண்டு நாள் விடுமுறை வாங்கி விட்டு வந்தேன்.’ஓணம்’ பண்டிகையை பெற்றோருடன் சேர்ந்து கொண்டாடுவதே பிடிக்கும்.
உறவினர்கள், நண்பர்களை வீட்டுக்கு அழைத்துள்ளேன். ஓணத்துக்காக பட்டு பாவாடை, சட்டை வாங்கி அணிந்தேன்.
வண்ணமயமான பூக்கோலங்கள் வாசலில் இடுவது இப்பண்டிகையின் ஸ்பெஷல். என் அம்மா ஓணம் பண்டிகையையொட்டி செய்யும் பாயாசம் ரொம்பவும் ருசியானது.
வாழை இலையில் விதவிதமான உணவுகள், மற்றும் பாயாசம் வைத்து கடவுளுக்கு படையலிட்டு விட்டு சாப்பிடும் இந்த நாள் மறக்க முடியாதது. இவ்வாறு அவர் கூறினார்.
ஓணம் கொண்டாடிய நடிகை அமலாபால்,
ஓணம் பண்டிகையின் போது புதுவிதமான பூக்கோலம் போடுவது எனக்கு பிடித்த விஷயம். சிறுவயதில் இருந்தே இதை செய்கிறேன். கல்லூரியில் படித்த போது ஓணத்துக்கு பூக்கோலம் போடுவதில் தோழிகளுக்குள் போட்டியே நடக்கும்.
அது மறக்க முடியாத நினைவுகள். பெற்றோருடன் ஓணத்தை கொண்டாடுகிறேன் என்றார்.
பாவனா கூறும்போது,
கன்னட படப்பிடிப்புக்காக கொழும்பில் இருப்பதால் ஊருக்கு போக முடியவில்லை. ஆனாலும் இங்கு படக்குழுவினருடன் அப்பண்டிகையை கொண்டாடினேன் என்றார்.
நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ் ஆகியோரும் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள்.
No comments:
Post a Comment